“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”
உதவி வழங்கியவர்: திரு மயில்வாகனம் சிறிரஞ்சன் (இயக்குனர் உதவும் இதயங்கள் நிறுவனம்)
காரணம்:திரு மயில்வாகனம் அவர்களின் 88 வது பிறந்த நாள் அன்று உதவும் இதயங்கள் கிராமிய மகளிர் முற்போக்கு ஒன்றியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது அத்துடன் பயன் தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இடம்: தேவிபுரம் புதுக்குடியிருப்பு
குழுவுக்கு வழங்கிய உதவி தொகை: 100,000.00 ரூபாய்.
சீருடை மற்றும் செலவுகள் உட்பட:35,00.00
19 வது அணி உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளிர் ஒன்றியம் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.
எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே! 1.போரினால் பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அதாவது இன்று
வரைக்கும் வாழ்வாதாரம் பெறாதவர்களுக்கு வாழ்வாதாரம். 2.உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடன் உதவி கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய முக்கியமாக பெண்கள் தலைமையில் மற்றும் விசேட தேவைக்கு உட்பட்டோரின் மாணவர்களை மையப்படுத்தி உதவி வருகின்றோம். 3.இளைஞர்கள் உடல் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் முடிந்தவரை விளையாட்டு நிகழ்வுகளையும்
ஊக்குவித்து வருகின்றோம்.
4.பெண்கள் தலைமைத்துவம், விசேடதேவைக்கு உட்பட்டோர்,வறுமையில் வாடும் பிள்ளைகளின் கல்விக்கு உதவிகள்.
5.பாதிக்கப்பட்ட கிராமம் தோறும் பாதிக்கப்பட்ட பெண்களை இணைத்து உதவும் இதயங்கள் கிராமிய முற்போக்கு மகளீர் ஒன்றியத்தை உருவாக்கி வருகின்றோம். 1 .அவர்கள் ஊடாக கிராமத்தில் ஒற்றுமையை நிலை படுத்துதல்.
2 . கிராமங்களை வளச்சி பெற வைத்தல், 3 .மரநடுகை, சிரமதானங்கள் 4 .பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுதல் 5 .சிறு கைத்தொழில் ஊக்கிவித்தல், 6 .சிறுவர் துஷ்பிரயோகம்,சிறு விடயங்களுக்கு தற்கொலை முயற்சிக்கு எதிராக மற்றும் மது,நுண்கடன் போன்றவற்றிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது 7 .முக்கியமாக மாணவர்களின் கல்விக்கு
இனம் கண்டு உதவுதல், மாலை நேரக்கல்வி நிலையங்கள் 8 .அனர்த்த காலங்களில் இனம் கண்டு உதவுதல் போன்ற விடயங்களை முன்னெடுத்துச் செயல்ப்படுத்துதல்.
இவ்வாறு பல உதவித்திட்டங்களை செயல்ப்படுத்தி வருகின்றோம்.
இன்று தேவிபுரம் என்னும் கிராமத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு ஜெயகாந் அவர்கள் முன்னிலையில் 15 பேர் கொண்ட 19 வது அணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு ஜெயகாந் அவர்கள் எமது மகளிர் அணி உறுப்பினர்கள், திரு சஜிவன் தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் அவர்களுக்கு நன்றி.
குழுவுக்கு வழங்கிய உதவி தொகை: 135,000.00 ரூபாய் Helping Hearts Germany
Previous Articleபால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது-Karihaalan news
Next Article இன்றைய ராசிபலன் -16.05.2022-Karihaalan news