மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான மதுபான போத்தல்கள் காவல்துறையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று மற்றும் நாளை விடுமுறை தினங்கள் என்பதனால், சட்டவிரோதமாக இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யவென, பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த மதுபான போத்தல்களின் பெறுமதி 6 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்