மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சிலருடைய அறிமுகம் கிடைக்க இருக்கிறது. உத்தியோகத்தர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதால் கூடுமானவரை நிதானத்தை கையாள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் பொறுமையாக கையாள வேண்டிய சூழ்நிலை உண்டு. தேவை இல்லாமல் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது. எதையும் எதிர் கொள்ளும் வல்லமை பிறக்கும். தேவையற்ற இடங்களுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் இருப்பது நல்லது. பொருளாதார ஏற்றம் சீராக இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். காலம் கடந்து செய்யும் முயற்சி பயனற்றது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய சேர்க்கை தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலத்தில் அக்கறை தேவை. சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிடங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காலம் நாள் என்பதால் வீண் கவலை கொள்ள தேவை இல்லை. உத்தியோகஸ்தர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை காணக்கூடிய நேரமாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்வது நல்லது. மனதிற்குள்ளேயே பூட்டி வைத்தால் மனவுளைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற தயக்கத்தை தகர்த்து எறிந்து விடுவது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுடைய வேலை பளு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். தேவையற்ற மன உளைச்சலை தவிர்த்து சீரான சிந்தனையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிடங்களிலிருந்து நற்செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வைராக்கியம் வெற்றிகரமாக நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து சேருவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ண அலைகள் சீராக இருக்கும். இறை சிந்தனை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான மதிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேகத்தைவிட விவேகம் தேவை.