சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலைநாட்டி, தமது அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை , நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.