சஜித் பிரேமசாதவின் (Sajith premadasa) ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

