காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபரி ஒருவரை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த ஆறு கிலோ 910 கிராம் கொண்ட கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று(05) இரவு இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பிரேமரத்தினா தலைமையிலான அதிரடிப்படையினர் குறித்த வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன் போது வியாபாரத்துக்காக பொதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கிலோ 910 கிராம் கொண்ட கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டவர் மீட்கப்பட்ட கஞ்சாவுடன் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்