மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக அமையப்போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. வாராக் கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து மறையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மனதிற்குள் குலதெய்வத்தின் பெயரை சொல்லிக்கொண்டே இருங்கள். எந்த பாதிப்பும் ஏற்படாது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுடைய கை எந்த இடத்திலும் ஓங்கி நிற்கும். உங்களுடைய சொல்லுக்கு அதிகப்படியான மரியாதை கிடைக்கப்போகிறது. சபையில் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவராக தெரிவீர்கள். பாராட்டுகள் குவியும். மனநிறைவான இந்த நன்னாளில் எதிர்பாராத ஒரு நல்ல செய்தியின் மூலம் சந்தோஷத்தில் திகைத்துப் போகப் போகிறீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லேசான தடுமாற்றம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் கொஞ்சம் திணறுவீர்கள். இருப்பினும் உங்களை சுற்றி இருப்பவர்கள், உறவினர்கள் உங்களுக்கான நல்வழியைக் காட்டி தருவார்கள். குழப்பம் வரும்போது ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படப் போகிறீர்கள். நாளைக்கான வேலையை கூட இன்றைக்கே முடித்து வைத்து விடுவீர்கள். உங்களுடைய பேச்சில் இருக்கும் உத்வேகம், தெளிவு அனைவரையும் வியக்கத்தக்க வகையில் அமையப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை சாதிக்க போகிறீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். சொந்தத் தொழிலில் அமோக லாபம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிகாரர்கள் இன்று கொஞ்சம் மந்தமான போக்கிலேயே காணப்படுவார்கள். எதையோ இழந்தது போல மனம் சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனால் நம்மிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்கள். பிறகு எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கப்போகின்றது. பிரிந்தவர்கள் ஒன்று சேர நல்ல காலம் வந்துவிட்டது. எதிர்பாராத அதிர்ஷ்டம் எந்நேரமும் உங்கள் அருகில் வரலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் சுமை படிப்படியாக குறையும். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் கெட்டி மேள சத்தம் கேட்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக அமையப்போகின்றது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளை இன்று தொடங்கலாம். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். அதிக வட்டிக்கு பணம் வாங்காதீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று எடுத்த முயற்சியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கை துணையை சந்தோஷப்படுத்த ஏதாவது ஒரு விஷயத்தை நிச்சயம் இன்று செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும்