நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றில் கருத்துரைத்தபோதே ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்தார்.
நாடாளுமன்றில் இன்று எதிர்கட்சிகளின் சார்பில் இரண்டு பேர் பிரதி சபாநாயகர் பதவிக்கான வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டனர்.
அரசாங்க கட்சியினால் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த முடியவில்லை. அரசாங்கம் ஒருவரை வேட்பாளராக முன்னிலைப்படுத்தியிருந்தால், இன்று அதன் நிலையை கண்டிருக்கமுடியும்.
இந்தநிலையில் நாட்டு மக்கள் ராஜபக்சர்களை மாத்திரமே போகச்சொல்கிறது. முழுமையை பொதுபெரமுன கட்சியை போகச்சொல்லவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். நாட்டில் பிரச்சினை தீவிரமாகியுள்ள நிலையில், இந்த வாரமும் நாடாளுமன்றம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவில்லை.
எனவே அடுத்த வாரமாவது கூடி, முடியுமான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு சபாநாயகர் முழுமையான முயற்சியை எடுக்கவேண்டும். இல்லையேல், நாடாளுமன்றில் கௌரவத்தை பாதுகாக்கமுடியாது.
இந்தநிலையில் பொதுமக்கள் இறுதியில் நாடாளுமன்றத்துக்கே வந்து போராட்டம் செய்வர் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.