யாழ்ப்பாணம் மாவட்டம் சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (02-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தீவிபத்து சம்பவத்தில் மகாஜன கல்லூரியில் க.பொ.த.(சா/த) – 2021 இல் கல்விபயிலும் செல்வி சுதர்சன் சதுர்சிகா மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் அதாவது இம்மாதம் 23 ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றுவதற்காக மிக்க ஆர்வத்துடன் கற்றுவந்த மாணவிக்கே இந்த துயரம் நேர்ந்துள்ளது.
குறித்த சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.