மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் எல்லாம் நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும் நல்ல நாளாக இருக்கப் போகிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கிறது. பயந்து பதுங்கி நாள் ஆபத்து இன்னும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கை எதிலும் ஓங்கி இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக உள்ளது. நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்கக்கூடிய நிலை உருவாகி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க இருக்கிறது. பெண்களுக்கு துணிச்சல் பிறக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விரக்தி மனப்பான்மை தவிர்த்து உற்சாகத்துடன் இருக்க முயற்சி செய்வது நல்லது. தேவையற்ற மன உளைச்சல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உங்களை நீங்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நடக்கக் கூடியவை யாவும் நன்மைக்கே நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதுப் பிறவி எடுத்தார் போல் இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதால் தேவையற்ற இழப்புகளை சந்திக்க நேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். தொழில் விருத்தி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. உங்களுடைய பொறுமையை சிலர் சீண்டிப் பார்ப்பார்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களால் முடியாது என்று யார் என்ன சொன்னாலும் அதை முடித்து காண்பிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைய இருக்கிறீர்கள். நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களது தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த எதிரிகள் தானாகவே விலகி சென்று விடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையில் விரிசல் ஏற்படாமல் இருக்க தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களுடைய நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று அப்படியே நடக்கும். ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் வந்து தானாகவே மறைந்துவிடும் என்பதால் வருத்தப்படத் தேவையில்லை. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இனக்கம் தேவை. வேலை நுணுக்கங்களை கற்றுக் கொண்டு முன்னேற நினைப்பீர்கள்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் வெளியிட பயணங்களைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் மௌனம் காப்பதும் உசிதமானது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் மேலும் வலுவாக்கும் என்பதால் உங்களுடைய ஒத்துழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த தேவையற்ற சண்டை சச்சரவுகள் மறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உஷ்ணம் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குறித்த நேரத்தில் வேலையை முடித்து விடுவீர்கள்