எதிர்வரும் புதன் கிழமை(04) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி விட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரியவருகிறது.
அரசாங்கத்திற்குள் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அணியில் இருந்து விலகி, சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவு தொடர்பாக அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சாராத ஒருவரை பிரதமராக தெரிவு செய்யுமாறும் பசில் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.