போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்ததை அடுத்து அமெரிக்க டொலருக்கு நிகரான, யூரோ கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் காஸ்ப்ரோம் போலந்து மற்றும் பல்கேரியாவிற்கான எரிவாயு விநியோகத்தை குறைப்பதாக கூறியதையடுத்து இந்நிலை ஏற்பட்ட்டுள்லதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது $1.0586 ஆக குறைந்தது.
ஐந்தாண்டுகளில் முதல் முறையாக $1.06.க்கு கீழே சரிந்தது. ஏப்ரலில் இருந்து, இதுவரை ஒற்றை நாணயம் 4% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மோசமான மாதாந்திர இழப்பை நோக்கி செல்கிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனில் உள்ள நிச்சயமற்ற தன்மை, வர்த்தகர்களின் பாதுகாப்பான புகலிடம் என்பன டொலருக்கு ஆதரவாக யூரோவை கைவிட வழிவகுத்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.