விவசாய மக்களுக்கு தேவையான உரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் யாலப் பருவத்திற்கு தேவையான இரசாயன மற்றும் கரிம உரங்களை தட்டுப்பாடு இன்றி நாடு முழுவதும் விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
உர விநியோகஸ்தர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான கடனுதவிக் கடிதங்கள் யாலப் பருவத்தை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.