நாட்டில் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண அறிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை குறிப்பிட்டார்.