பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் பாரியளவிலான ஊழல் மோசடிகள், மனித படுகொலைகள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்டு வந்த சந்தேக நபர்களே இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் நபர்களுக்கு இடையில் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகளுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வரும் நபர்கள் உள்ளடங்குவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு மோசடிகளின் மூலம் பல கோடி ரூபா பணம் சம்பாதித்து கொண்டவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர் புலனாய்வுப் பிரிவினை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சில நபர்கள் போலி ஆவணங்களைத் தயாரித்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சில மோசடியாளர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.