கொழும்பு பங்கு சந்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய நாள் முழுவதும் அது மூடப்படும் எனவும் கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
ஷ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்ரீலங்கா 20 (S&P SL20) சுட்டெண் முன்னைய முடிவில் இருந்து 10%க்கு மேல் குறைந்துள்ளது.
முன்னதாக, இன்று காலையில் S&P SL20 சுட்டெண் முன்னைய முடிவில் இருந்து 5%க்கு மேல் சரிந்ததால், இன்று காலை கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வழக்கமான வர்த்தகம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
எனினும் முற்பகல் 10.31 மணிக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டு பின்னர் முற்பகல் 11.01 மணிவரை அது நீடிக்கப்பட்டது.
இருப்பினும், வர்த்தகம் மீண்டும் ஆரம்பித்த பிறகு குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்தது.