நுவரெலியா – இராகலை பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க பொது மக்கள் முயற்சித்து வருகின்றனர்.
தீயணைப்பு சேவைக்கு அறிவித்தும் ஒரு மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையிலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் வரவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து விபரம் வெளியாகவில்லை.