முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதனை தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்குமாறு கோரி முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
சட்டத்தரணி மைத்திரி குணரட்ன நீதிமன்றில் இந்த மனுவின் மனுதாரர் சார்பில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குலுவல நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பிணைமுறிகளுக்காக மத்திய வங்கி 500 பில்லியன் டொலர் பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் இதில் பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.