இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் வீதிக்கு இறங்கி தடைகளை போட்டு, ரயர்களை கொழுத்தி போராட்டங்களை நடத்திவருவதனால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராடம் வெடித்துள்ள நிலையில் காலி முகதிடலில் தொடர்போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.