இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குவது தொடர்பில் சீனாவும், இந்தியாவும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில் குறித்த உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் போது தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தியாவிடம் இருந்து உணவு மற்றும் அவசர தேவைகளுக்காக ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இலங்கை இந்தியாவுடன் ஐந்து முதலீட்டு உடன்படிக்கைகளுக்கு இணங்கியது.