அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது போராட்டக்காரர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்திற்கு வருகை தருவோரின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த கோபுரம் அமைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை சார் புத்திஜீவிகள் தனக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்காலிக தொலைத்தொடர்பு கோபுரம் கோபுரம் அங்கிருந்து இன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.