யாழில் அனுமதிபத்திரமின்றி, சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த 8 முதிரை மர குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.