மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஸ்ட மழை பொழிய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு பல வழிகளில் இருந்து கிடைக்கும். தடைப்பட்ட சுப காரியம் பேச்சுவார்த்தைகள் இனிதே நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூடுதல் பொறுப்புணர்வை ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பெறும் பாக்கியம் உண்டு. தொலைதூர கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை தரும் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு கால அவகாசம் கொடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வெற்றி வாகை சூட கூடிய அற்புத வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது வெற்றியை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கக்கூடிய ஒவ்வொரு அடியிலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் கண்ணியத்துடன் செயல்படுவது நல்லது. குறுக்குவழி ஆபத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மதிப்பு, மரியாதை உயரக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்ளாத சிலர் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பன்மடங்கு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய வாய்ப்புகளை நழுவ விட்டுவிடாதீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வைராக்கியம் பெரிதாக தெரியும். எதையும் விட்டுக் கொடுக்காமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான பராமரிப்பு தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் அக்கறை தேவை. தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் நீங்கும். சகோதர,,, சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மன கசப்புகள் தீரும். புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பத்தில் இருந்து மீள இருக்கிறீர்கள். எது சரி? எது தவறு? என்கிற புரிதல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடல் சோர்வு ஏற்படாது. உங்களுடைய உற்சாகம் அவர்களையும் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் இருக்கும்.