கொழும்பு நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்ணீர் புகை குண்டுகளை தோளில் சுமந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இது குறித்த புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல்லரும் அதிச்சி அடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெடுக்கடியை அடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை விலகுமாறு வலியுறுத்தி பொராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் நாடாளமன்றை முற்றுகையிடசென்ற மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடி பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.