அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான போராட்டத்தில் 89 வயது மூதாட்டி இணைந்துகொண்டுள்ள்ளதுடன் இந்த அரசாங்கத்தால் தான் அழுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிற்கு அரசியல்வாதிகளே காரணம் என அவர் சாடியுள்ளார். எனக்கு 89 வயது ஒவ்வொரு இரவும் மின்சாரம் துண்டிக்கப்படும்போது நான் அழுவதாகவும் அப்பென் கூறியுள்ளார்.
அதோடு ,சமையல் எரிவாயுவையும் பாலையும் பெறுவதற்காக நான் நீண்ட வரிசைகளில் நிற்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் , நாங்கள் என்ன தவறு செய்தோம் ,கடவுளே இலங்கையை காப்பாற்றும் எனவும் அந்த மூதாட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.