நாளை(05) முதல் 8 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
GROUPS ABCDEFGHIJKL: 4 மணித்தியாலம் – காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் 2 மணித்தியாலமும்30 நிமிடம் – மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும்,
GROUPS PQRSTUVW: 4 மணித்தியாலம் – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 2 மணித்தியாலமும்30 நிமிடம்- மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும்,
GROUP CC1: 3 மணித்தியாலமும்30 நிமிடம் – காலை 6. மணி முதல் இரவு 9.30 மணி வரையில் மின்வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.