தனது தாய் மதுபானம் விற்பனை செய்வதாலும், பல்வேறு நபர்கள் தாயை சந்திக்க வீட்டுக்கு வருவதாலும் தன்னால் தாயுடன் வசிக்க முடியாது என 14 வயது பாடசாலை மாணவியொருவர் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது .
கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் குறித்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். தனது தாயைப்போல் தந்தையும் வேறு திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்த்துவருகின்றார்.
தாய் மதுபானம் விற்பனை செய்வதாகவும் தாயிடம் மதுபானம் கொள்வனவு செய்ய வெளியிடங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் வீட்டுக்கு வருவதாகவும் சிறுமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாயின் இரண்டாவது கணவர் வீட்டில் இல்லாத போது தாயை சந்திக்க பல்வேறு நபர்கள் இரவிலும் பகலிலும் வீட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ள சிறுமி தாயின் இரண்டாவது கணவர் தனக்கு தகாத ரீதியில் அழுத்தங்களை கொடுப்பதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வடமத்திய மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் ஆணையாளர் சுரிதா பெரேராவின் ஆலோசனையின் பேரில் கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி கருணா கீர்த்திரத்ன விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி இப்பலலோகம பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளிடம் சென்ற நிலையில், சிறுமியை சட்ட நடவடிக்கைகளுக்காக கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் இப்ப லோகம பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி கருணா கீர்த்திரத்ன சிறுமியை கெக்கிராவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.