நெல் சந்தைப்படுத்தம் சபை பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக்குவதற்கு கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசி விலை அதிகரிப்பதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் ஐயாயிரம் மெட்ரிக் தொன் நெல் தற்போது அரிசியாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லைக் கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கும் ஏனைய தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.