37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
எவ்வாறாயினும், 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்துள்ள சிங்கப்பூரின் விடோல் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலுக்கு செலுத்த வேண்டிய 52 மில்லியன் டொலர் நேற்று மாலை வரை செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் குறித்த கப்பல் இன்றுடன் 7 நாட்களாக அந்த கப்பல் சர்வதேச கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை- இந்திய ஒயில் நிறுவனம் 6000 மெட்ரிக் தொன் டீசலை மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்க நேற்று இணக்கம் தெரிவித்தது.
அதன்படி திருகோணமலையிலுள்ள லங்கா IOC களஞ்சியசாலையிலிருந்து இந்த டீசல் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.