மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் சந்திப்பீர்கள். மற்றவர்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சுயதொழிலில் எதிர்பார்க்கக் கூடிய வருமானம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத பணவரவு சந்திக்க இருக்கிறீர்கள். பழைய கணக்கு ஒன்று முடியக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்கள் நவீன உபகரணங்களை கையாளுவதில் கவனம் தேவை. வாகன பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே புரிதல் இல்லை எனில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிமையான நாளாக கழிக்க இருக்கிறீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். தொலைதூர போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகஸ்தர்கள் முன் பின் தெரியாதவர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கியமான ஒரு முடிவை எடுக்க இருக்கிறீர்கள். தேவையற்ற மன சஞ்சலத்தை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இனிமை உண்டு. கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகள் சாதகமான பலன் கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பெரிதாக நினைக்கும் விஷயம் சாதாரணமாக முடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசலை உண்டாக்கி சூழ்ச்சிகள் புரிய வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மனரீதியான வீண் விரயங்கள் ஏற்படலாம்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனத்தெளிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எது சரி? என்கிற முடிவை எடுக்கக் கூடிய தன்னம்பிக்கை வளரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய செய்திகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களுடைய பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் இருக்கும் குறைகளை மற்றவர்கள் முன்னிலையில் விவாதிப்பது நல்லதல்ல. தொலை தூர இடங்களிலிருந்து லாபம் பெருக கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களை அடையப் போகிறீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பொருளாதார ரீதியான ஏற்றம் காணும் என்பதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கொடுத்த வேலைகளை கொடுத்து நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபார தொழிலில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் உயரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை பற்றி வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலப் பலன் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு பொறுப்பு சுமை ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே நிதானம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய இரக்க சுபாவத்தால் வெற்றி அடைவீர்கள். சமயோசித புத்தி உள்ளவர் களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் கூடும்.