கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நகர சபை தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.
சிறுநீரக நோய் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி உட்பட மூன்று பேர் இந்த முச்சக்கர வண்டியில் கஹடகஸ்திகிலிய மஹாபொத்தன பகுதியில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
முச்சக்கர வண்டி வைத்தியசாலையின் நுழையவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்ட போது வண்டி திடீரென தீப்பிடித்துள்ளது.
வைத்தியசாலையின் ஊழியர்கள், முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்தில் இருந்த நோயாளி உட்பட மூன்று பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
களுத்துறை பண்டாரகமை நகரில் இன்று முற்பகல் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் முச்சக்கர வண்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்த சம்பவம் நடந்தது.