‘பாரடைஸ் விசா’ என்ற பெயரில் இலங்கையில் புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நீண்டகால பயணிகளுக்கு ‘பாரடைஸ் விசா’ வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் அதற்கு வெளியில் உள்ள முதலீட்டாளர்களுக்கு இவ்வாறான விசாக்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொதுவாக இலங்கையில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்குச் செல்வதை விரும்புகிறார்கள். இந்த நிலையில் அவ்வாறானவர்களுக்கும் பாரடைஸ் விசா வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்