2020 – 2021 ரைகம் டெலி விருதுகள் வழங்கும் விழா நேற்று (26) கொழும்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தெரண ஊடக வலையமைப்பு பல விருதுகளை பெற்றுள்ளது.
ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புக்கான விருதை அத தெரண வென்றுள்ளது.
அத்துடன் 2021 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சித் தொடருக்கான விருதை ரிவி தெரண வென்றுள்ளது.
ரிவி தெரணவில் ஒளிபரப்பான ´அளுத் பார்ளிமேத்துவ´ நிகழ்ச்சியில் ´பச சக விச´ என்ற கரிம உரம் தொடர்பான சிறப்புப் கலந்துரையாடலை இயக்கியதற்காக பிரசாத் கொமசாரு சவாலான இயக்குனருக்காக விருதை பெற்றுள்ளார்.
டில்கா சமன்மலி மற்றும் ஜனிதா லியனகே ஆகியோருக்கு ரிவி தெரணவில் ஒளிபரப்பான ´டிஃபென்ஸ் தி நேச்சர்´ என்ற ஆவண நிகழ்ச்சியை தயாரித்து ஔிபரப்பிய சிறப்பான செயல்களுக்காக 2020-2021 ரைகம் டெலி விருது வழங்கப்பட்டுள்ளது.
விமுக்தி ரொட்ரிகோ மற்றும் சமிந்த தென்னகோன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட “சிட்டி ஆஃப் மியூசிக்” நிகழ்ச்சி 2021 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை வென்றுள்ளது.
இந்த வருட ரைகம் டெலி விருதுகளில் 2021 இன் சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருதை ரிவி தெரண அறிவிப்பாளர் திசங்க கமகே வெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான கிரியேட்டிவ் டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கான விருதை கிரிஷாந்தி ராஜிகா மற்றும் கெலும் தர்ஷன தயாரித்த தெரண டிரீம் ஸ்டார் சீசன் 9 வென்றுள்ளது.
சிந்தக கம்லத் தனது “பிரிமா வாத சாமா” என்ற இசை நிகழ்ச்சிக்காக டிவி தெரணவுக்காக “ஜூரி மெரிட் விருது 2021” வென்றார்.
2021 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி பிண்ணனி குரல் தயாரிப்புக்கான விருதை “பண்டித ராமா” நாடகத்திற்காக அனுராதா சிகேரா வென்றார்.