புத்தாண்டு விடுமுறையின் போது சுற்றுலா பயணங்கள் மேற்கொண்டால் அதனை சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிர்வதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்தபட்சம் சுற்றுலா பயணம் நிறைவடையும் வரையிலேனும் இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதனை தவிர்ப்பது மிகவும் முக்கியம் என பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை வெளியிடுவதன் மூலம் திருடர்களும் பல்வேறு கொள்ளையர்களும் இதனை சாதகமாக்கிக் கொள்வதாக அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்ப உல்லாசப் பயணங்களில் ஈடுபடும் நபர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் கொள்ளையர்கள், அந்த நபர்களின் வீடுகளில் புகுந்து பொருட்களைத் திருடக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயணங்களின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் பயணப் பொதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.