இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 55 வருடங்களின் பின்னர் மார்ச் 27 ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்காக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்ட விமான சேவைகளை ஆரம்பிக் கும் விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதன்படி, இந்த விமான நிறுவனங்கள் விதிக்கும் விமான புறப்பாடு வரியை 50% குறைக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஓராண்டுக்கு இது செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.