ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வராது தொடந்து வரும் நிலையில், போரை நிறுத்த பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இது வரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான முடிவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) பச்சை நிற ஆடையில் தோன்றுவதை அனைவரும் கவனித்திருக்கக் கூடும். போர் தொடங்கியதிலிருந்து, ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) பச்சை நிற ஆடையில் காணப்படும் காரணம் என்ன என்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது.
பச்சை நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு தான், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் உரையாற்றினார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ஒரு நடிகர். அவர் உலகின் முன் தோன்றும் போது, அவரது ஆடை மூலம் தனது நிலையை உணர்த்த விரும்புகிறார். அத்ன்படி ஜெலென்ஸ்கி தன்னை ஒரு கிளர்ச்சியாளராகவும், போஸ்டர் பாய்யாகவும் உலகுக்குக் காட்டிக் கொள்கிறார் என கூறப்படுகிறது.
அதேசமயம் மறுபுறம், ரஷ்ய ஜனாதிபதி புடின் (Putin) அணிந்து வரும் ஆடைகள், அவரது நம்பிக்கை உணர்வையும், மேற்கத்திய நாடுகளை தான் ஆதிக்கம் செலுத்துவது போன்ற உணர்வில் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணிந்திருந்த 11 லட்சம் ரூபா மதிப்புள்ள ஜாக்கெட் குறித்தும் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அவர் அணிந்துள்ள அந்த ஜாக்கெட்டை பிரபல இத்தாலிய நிறுவனமான லோரோ பியானா வடிவமைத்துள்ளது.
மேலும் புடின் (Vladimir Putin) ஜாக்கெட்டின் கீழ் அணிந்திருந்த ஸ்வெட்டரின் விலையும் சுமார் 4 ஆயிரத்து 218 அமெரிக்க டொலர்கள் அதாவது சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் எனவும் கூறப்படுகிறது.