தமிழக அரசியல்வாதிகளில் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களால் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த ஹரி நாடாரிடம் எத்தனை கிலோ தங்க இருக்கிறது என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவில் சொத்து மதிப்பு, குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கடன் போன்ற விவரங்கள் உள்ளடங்கிய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஹரி நாடார் 15ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஹரி நாடார் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் 5 கிலோ அதாவது 11.200 கிராம் தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மதிப்பு 4.73 கோடி ஆகும். பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்த தகவலின் படி, ஹரி நாடாரிடம் இரும்கும் அசையும் சொத்தின் மொத்த மதிப்பு 12,61,19,403 ரூபாய் ஆகும், அசையா சொத்தின் மொத்த மதிப்பு 14,65,000 ரூபாய் ஆகும்.