மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிக நல்ல பலன்களை தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் ஏற்றம் காண கூடிய அமைப்பு என்பதால் பண புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் அற்புதமான நாளாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்த நல்ல விஷயங்களுக்கு உரிய பலன்களை காணக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைய போகிறது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடுதலாக பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும் யோகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகஸ்தர்கள் சக பணியாளர்களுடன் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தர கூடிய அமைப்பு என்பதால் நீங்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்க அனுகூலமான நாளாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி அடையும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விருத்தி அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சாதுரியமாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் காணலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட கூடிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கக்கூடிய லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்ப பொறுப்புகளை கூடுதலாக சுமக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கொண்டிருக்கும் சாதக பலன் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும்.