நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளுக்காக நீண்டநேரம் வரிசையில் நின்ற நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இன்று முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தலைநகர் கொழும்பிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றில் இராணுவத்தினர்,பொலிஸார் கடமையில் நிற்க,எரிபொருள் கொள்வனவுக்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்தனர்