யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இன்றைய தினம் நல்லூர் கந்தன் தரிசித்து பூசை வழிபாட்டில் கலந்து கொள்வார் என முன்னேற்பாடுகள் அனைத்தும் தயாராக காணப்பட்டது.
இருந்த போதிலும் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு மாவிட்டபுர கந்தனை வழிபட்டு மாவட்டபுரம் கந்தனை தரிசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது