காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன் நடுவீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தாய்மாரிடம் பொலிஸார் அநாகரிகமான முறையில் நடத்துக்கொண்டதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
“சாப்பாடு குடுக்க வக்கில்லாதவன் மக்களைக் கொன்றவன்” சுதந்திரமாக வந்து திரிகிறான் என தெரிவித்து, நடுவீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மட்டுவில் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் முல்லைத்தீவிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பேருந்து, மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதியில் வழிமறிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பேருந்ததை நிறுத்திய பொலிஸார், ஓட்டுனரை மிரட்டியதாவும், அதன் பின்னர் பேருந்து தொடர்ந்து பயணிக்க முடியாத வண்ணம் தாய்மாரை அநாகரிக முறையில் நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த தாய்மார் நடு வீதியில் படுத்துறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.