கட்டுநாயக்க விமானப் படை முகாமுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கவனமின்றி சென்ற மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதியதில் அதில் பயணம் செய்த இளைஞன் படுகாயமடைந்தது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் கடவையில் பாதுகாப்பு நுழைவு வாயில் அமைக்கப்படவில்லை என்பதுடன் ரயில் வருவதை காட்டும் மின்சார சமிக்ஞை கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
எனினும் அது செயற்படுவதில்லை. அதனை திருத்தம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீர்கொழும்பு ரயில்வே சமிக்ஞை பரிசோதனை அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விமானப் படை முகாம் வீதி குரன கட்டுநாயக்க என்ற பகுதியில் வசித்து வந்த 27 வயதான திலான் ரெவோன் விஜேந்திர பெர்னாண்டோ என்ற இளைஞனே இன்று நடந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, தலுபொத்த ரயில் கடமையில், புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயில் மோதியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.