தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சந்திப்புக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, எதிர்வரும் 25ம் திகதி குறித்த சந்திப்பு மீளவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.