சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனின் ஆணுறுப்பில் பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திவுலப்பிட்டிய, கடவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவன் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தமைக்கு தண்டனையாக சிறுவர் இல்ல விடுதி மேற்பார்வையாளர் இந்த தண்டனை வழங்கியயதாகவும் கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுவன் பற்றிய தகவல்களை பொலிசார் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அதேவேளை குறித்த சிறுவர் இல்லத்தில் சுமார் 25 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை மேற்பார்வையாளர் துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திவுலப்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு திவுலபிட்டிய பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால், சிறுவர் இல்ல காப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைது.