இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoHomeGota பிரச்சாரம் சமூகவலைத்தளங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சியனரால் #WeAreWithGota பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமைச்சர்களும், அரச திணைக்களங்களில் பதவிகளை வகித்து வருபவர்களும், தமது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள கணக்குகளில் எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த அரசை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி கொழும்பில் நாளை பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.