இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இடம்பெற்ற வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட அணித்தலைவர் ரோஹித் சர்மா தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் எஞ்சலோ மெத்தியூஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் ஜெஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 143 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.