யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2022) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனைய சைக்கிள்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.