2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நாளை காலை 6 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை 6 மணிக்கு முன்னர் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் 3 லட்சத்து 40 ஆயிரத்து 507 மாணவர்கள் பரீட்சை எழுதினர்.