நாட்டு மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் விரோதமானது எனவும், அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆதரவளிக்கக் கூடாது எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுவதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இருப்பினும் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கும், அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு காட்ட இன்னும் காத்திருக்கிறேன்.
தாம் இனி அமைச்சராகப் பதவி வகிக்கப் போவதில்லை. வேறு ஒருவரை இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும், அரசாங்கம் தனது சொந்த காலில் நின்று நடவடிக்கைகளை எடுக்குமாறு சவால் விடுவதாக அவர் தெரிவித்துள்ளது