பதுளை – ஓயாவில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் தனது நண்பர்களுடன், இன்று ஓயாவில் நீராட சென்ற நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பதுளை 3ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்